இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*ஏன் அவசரம்? எதிர்க்கட்சிகள் கேள்வி: பீகாரில் நடந்து வருவது போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்குமாறு அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் (CEO) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் முடிவடையும் வரை காத்திருந்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
* கேரள ‘பாத பூஜை’ சர்ச்சை: பாத பூஜை நமது கலாச்சாரத் தின் ஒரு பகுதி என்கிறார் ஆளுநர்: குரு பூர்ணிமா (வியாச ஜெயந்தி) கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், சங் பரிவார் ஆதரவு அறக்கட்டளைகளால் நடத்தப்படும் பள்ளிகள் ‘பாத பூஜை’ நடத்தின, அதில் மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களைக் கழுவி, அவர்களின் பாதங்களில் பூக்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
தி இந்து:
* மதச்சார்பின்மை – அரசமைப்புச் சட்டம் அறிமுகமான முதல் நாளிலிருந்து மறைமுகமாக இருந்தது; 1976 இல் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இதில் ஏன் வம்பு? என்கிறார் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் பைசான் முஸ்தபா.
தி டெலிகிராப்:
* பீகாரில் இரண்டு பாஜக துணை முதலமைச்சர்கள் இருப்பது வீண் என்று தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் நடந்த கொலைகள் குறித்து தேஜஸ்வி கண்டனம். பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா நகரத்தில் தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, 12.7.2025 இரவு பாட்னாவின் புறநகரில் உள்ளூர் பாஜக விவசாயித் தலைவர் சுரேந்திர கேவத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
– குடந்தை கருணா