புதுடில்லி, ஜூலை13– ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான மசோதாக்களில் பல் வேறு குறைபாடுகள் உள்ள தாகவும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளான டி.ஓய்.சந்திரசூட், ஜே.எஸ்.கெஹர் ஆகியோர் அழைக்கப் பட்டிருந்தனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களிலும் பல்வேறு குறை பாடுகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கக் கூடாது. தற்போதைய மசோதாவில் தேர்தல் ஆணையத்துக்கு வழங் கப்பட்டுள்ள வானளா விய அதிகாரங்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகள் தேவை. தற்போதைய நிலையில் மசோதா நிறைவேற்றப் பட்டால் அது நீதிமன்றத்தால் ரத்து செய் யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே, மசோதாக் களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் இருவருமே வலியுறுத்தினர். அய்ந்து ஆண்டு காலம்தேர்வு செய்யப்பட்ட எந்த மாநில அரசையும் எக்காரணம் கொண்டும் பாதியில் கலைக்கக் கூடாது என்று ஜே.எஸ்.கெஹர் அறிவுறுத்தினார். தேர்வு செய்யப்பட்ட அரசு நல்லாட்சி வழங்குவதற்கு 5 ஆண்டுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.