13.7.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எதிரும், புதிரும்: என்டிஏ வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்: நான்காவது முறையாக அமித்ஷா பேட்டி; தமிழ்நாட்டில் அதிமுக தனித்து தான் ஆட்சி: எடப்பாடி பேட்டி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 2029இல் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளாட்சி தேர்தலில் 42 சதவீத இட ஒதுக்கீடு முக்கிய சாதனையாக திகழும், முதலமைச்சர் ரேவந்த் பெருமிதம்.
* ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதுதான் அண்ணல் அம்பேத்கரின் விருப்பம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு.
* விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேஜஸ்வி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு; ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் கண்டனம்: நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியில் “பீகாரிகள் இப்போது இன்னும் எத்தனை கொலைகளைச் சந்திப்பார்கள்? பீகார் காவல் துறையின் பொறுப்பு என்ன?” என கேள்வி.
தி டெலிகிராப்:
* யுஜிசியின் ராக்கிங் எதிர்ப்பு அமைப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்று டில்லி உயர் நீதிமன்றம் காட்டம். 2022 தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்சிஆர்பி) சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் தற்கொலைகளால் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும் மாணவர்கள் 7.6% – அல்லது 13,044 – ஆக உள்ளனர், இது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.
எகனாமிக் டைம்ஸ்:
* உ.பி. யோகிக்கு புது தலைவலி: உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கீடு ஒட்டு மொத்த குரல்: அடுத்த சட்டமன்றத் தேர்தல் இன்னும் சிறிது காலம் உள்ள போதிலும், உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான – நிஷாத் கட்சி, எஸ்.பி.எஸ்.பி., அப்னா தளம், தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாஜக ஆளும் உத்தரகாண்டில் போலி சாமியார்கள் (சாமியார்களே போலிதானே): இதுவரை 23 போலி சாமியார்கள் கைது. ‘ஆபரேஷன் காலனேமி’ என்ற மாநில அளவிலான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளதாம்.
– குடந்தை கருணா