12.7.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டம்; பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணய்யா உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேவந்துக்கு பாராட்டு.
* பீகார் இந்தியா கூட்டணியில் (மகாகத்பந்தன்) சேர ஓவைசி விருப்பம்.
* வாக்களிப்பது அரசியல் சட்டம் தந்த உரிமை; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என தலையங்கம்.
* “75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்கள் வேலை செய்ய விட வேண்டும்,” என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பாஜக தலைமை இதனை நிராகரித்து உள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டில்லிக்கு (பி.ஜே.பி.க்கு) துணை போகிறார்கள். நாம் எட்டிய வளர்ச்சிக்காக நம்மை தண்டிக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறார்கள். தெளிவாகச் சொல்கிறேன்: தமிழ்நாடு உங்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஒருமித்து எழுவோம்! இது டில்லி அணிக்கு எதிரான ஓரணி! நமது மண், மொழி, மானம் காக்க இணைவீர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு.
தி ஹிந்து:
* ஏழைகளுக்கான கிராமப்புற வீட்டு வசதிக்கான திமுக அரசின் முதன்மை திட்டமான ‘கலைஞர் கனவு இல்லம்’, ஒரு முக்கிய மைல்கல்லை – ஒரு லட்சம் வீடுகளை கட்டி முடிக்கும் – சில வாரங்களில் எட்டும் என அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரு மாநிலத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை தாமதப்படுத்த முடியுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அரசமைப்பு சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுமா என்று மேனாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ். கேஹர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் சந்தேகம் எழுப்பினர்.
* ஒடிசாவில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதற்காக காளைகளைப் போல பழங்குடியின இணை நுகத்தடியில் கட்டப்பட்டு, ‘நிலத்தை உழ’ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார். இது அவர்கள் சமூகத்திற்கு விரோதமான செயலாம்?
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசா பாஜக அரசு பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுகிறது; பூரி ரத யாத்திரை அதானி களுக்காக ரதங்கள் நிறுத்தப்பட்டன: ராகுல் காந்தி விமர்சனம்.
– குடந்தை கருணா