காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

3 Min Read

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்பு: செங்கற்பட்டு மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் நிதி அறிவிப்பு

காஞ்சிபுரம், ஜூலை 9 காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (8.7.2025) மாலை 6 மணிக்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை, மிலிட்டரி ரோடு பகுதியில், மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி இல்லத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை ஏற்றார்.  காஞ்சிபுரம் மாநகர  கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான ந. சிதம்பரநாதன் வரவேற்புரையாற்றினார்.  கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்ட  கழகத் தலைவர்
அ.வெ. முரளி தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்திற்கு முன்னிலை வகித்து,  தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு. எல்லப்பன், மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார்,  காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இளம்பரிதி  ஆகியோர் உரையாற்றினர்.

கருத்துரை

மாவட்டக் காப்பாளர் ச. வேலாயுதம், அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராஜன், மாவட்ட  கழகத் துணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ.மோகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அ. அருண்குமார், வாலாஜாபாத் ஒன்றிய  கழக அமைப்பாளர் எஸ். செல்வம், காஞ்சிபுரம் ஒன்றிய கழக அமைப்பாளர் கோ. நடராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.வெ. சிறீதர், பகுத்தறிவுப் பாடகர் உலகஒளி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் சு. பன்னீர்செல்வம், கழக இளைஞரணித் தோழர் கவிதம்பி, கழகத் தோழர் நாகை லெனின், பகுத்தறிவாளர் கழகத் தோழர் பல்லவர்மேடு க. சேகர், இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட தோழர்கள் வேல்முருகன், பெரியார்தாசன் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கழக மாநில மகளிர் அணி துணை செயலாளர் பெரியார் செல்வி, கலைத்துறையின் மாநில தலைவர் மு. கலைவாணன், செங்கற்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் சிங்கப்பெருமாள் கோவில் கருணாகரன் ஆகியோர் தங்கள் திட்டங்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பொதுச்செயலாளர் உரை

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் 4.10.2025 அன்று மறைமலைநகரில் நடக்க உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் செயல்திட்டங்களான  சுவரெழுத்து விளம்பரங்கள், நிதி வசூல், பிரச்சாரம், புதிய தோழர்களை அழைத்து வருதல், மகளிர், மாணவர்கள், இளைஞர்களை அழைத்து வரவேண்டியதன் அவசியம், இயக்க வளர்ச்சிக்கு பெரியார் ஆற்றிய தொண்டு, தமிழர் தலைவர் ஆசிரியரின் உழைப்பு, பெரியார் உலகம் குறித்த செய்திகள் முதலிய செய்திகளைப் பகிர்ந்து மகிழ்ந்தார். மாநாட்டு வெற்றிக்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தீர்மானங்கள்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்களுடன் குடும்பம் குடும்பமாக பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் சுவரெழுத்துப் பிரச்சாரம் பெருமளவில் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

தெருமுனைப் பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் பிரச்சாரமும், நிதி வசூலும் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் இருந்து சமூக காப்பு அணி பயிற்சிக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தவமணி, மருத்துவர் குழலரசி, எழிலரசி, கே. சித்ரா, தோழர் குறளரசன், தோழர் சரவ ணன் முதலியோர் கலந்து கொண்டனர்.

நன்கொடை அறிவித்தோர்:

முனைவர் காஞ்சி பா. கதிரவன் ரூ.5000/- போளூர் பன்னீர்செல்வம் ரூ.2000/-

பா.இளம்பரிதி ரூ.10,000/- ச. வேலா யுதம் ரூ.5000/- வீ. கோவிந்தராஜி ரூ.1000/-

கோ.நடராசன் ரூ.2000/- கவி நம்பி ரூ.1000/- பெரியார்தாசன் ரூ.1000/-
க. சேகர் ரூ.1000/-

பொறுப்பாளர்களுக்கும் புதியதாக இணைந்த தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. கழகக்காப்பாளர் ச. வேலாயுதம் கழகப் பொதுச்செயலாளருக்கு பயனாடைக்கு பதில் ரூ100/- வழங்கினார். வருகைதந்த அனைத்து தோழர்களுக்கும் இயக்க நூல் வழங்கப்பட்டது.

இரவு 8.30 மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *