சுவற்றில் பெயிண்ட் அடித்து பார்த்திருப்போம், ஆனால் ஒரு நிறுவனம் அரசு கஜானாவிலே அடித்துள்ளது.
ம.பி-இல் உள்ள அரசுப்பள்ளியில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ரூ.1,06,984 செலவழிக்கப்பட்டதாம், மற்றொரு பள்ளியில் 10 ஜன்னல்கள், 4 கதவுகள் பொருத்தப்பட்டு பெயிண்ட் அடிக்க ரூ.2,31,685 செலவானதாம். இப்பணியில் 648 பேர் ஈடுபட்டதாகவும் கூறி செலவுக்கான ரசீதையும் அரசுக்கு வழங்கியுள்ளதாம் சுதாகர் கன்ஸ்டரக்ஷன் எனும் நிறுவனம்.
புளூடூத் பயன்பாடு எச்சரிக்கை!
புளூடூத் ஆடியோ சாதனங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாக இந்திய சைபர் குற்றத் தடுப்பு முகமை எச்சரித்துள்ளது. புளூடூத் மூலம் ஸ்பீக்கர்கள், இயர் பட்ஸ், ஹெட்போன் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை ஹேக் செய்து, உங்களின் உரையாடல்களை கண்காணிக்கவும், அழைப்புகளை ஹைஜாக் செய்யவும், கால் டேட்டா, கான்டாக்ட்ஸ் உள்ளிட்டவற்றை திருடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, பொது இடங்களில் புளூடூத் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.