இன்று (07.07.2025) சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.