உலகின் சிறந்த உணவு நகரங்கள் சென்னைக்கு 75-ஆவது இடம்

1 Min Read

சென்னை, ஜூலை 6 – உலகின் மிகச் சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள் என்ற பட்டியலில் சென்னை 75-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. டேஸ்ட் அட்லஸ் (Taste Atlas) என்ற நிறுவனம் உலகின் மிகச்சிறந்த உணவு கள் கிடைக்கும் 100 நகரங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய உணவு வகைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அது தொடர்பான விமர்சன மதிப்புரைகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் தற்போது வெளி யிட்டுள்ள பட்டியலில் சென்னை உட்பட

இந்தியாவின் 6 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் மும்பை 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அமிர்தசரஸ் 43-ஆவது இடத்தையும் டில்லி 45-ஆவது இடத்தையும் அய்தராபாத் 50-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
கொல்கத்தாவிற்கு 71-ஆவது இடமும் சென்னைக்கு 75-ஆவது இடமும் வழங்கப்பட்டுள்ளது. வட பாவ், பாவ் பாஜி, பாம்பே பிரியாணி, அமிர்த சரி குல்சா, சோலே பதுரே, பட்டர் சிக்கன், ரசகுல்லா, தோசை, இட்லி ஆகியவை இந்திய நகரங்களின் சிறப்பு உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *