பிலிப்பைன்ஸ் நாட்டில், படிக்கட்டு முறையில் நெல் விவசாயம் நடக்கிறது.
இது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய விவசாய முறையாகும்.
இங்குள்ள மலைப்பகுதிகளில் ஓரளவிற்கு சமதள நிலங்கள் அமைக்கப்பட்டு, நெல் பயிரிட ஏற்றவாறு நிலங்கள் தயார் செய்யப்படுகின்றன.
படிக்கட்டு முறையில் அமைக்கப்பட்ட நிலங்களில், நீரைத் தேக்கி வைத்து, நெல் பயிர்களுக்கு சீராக நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.
படிக்கட்டு முறை, மண் அரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை நிலங்கள் மழைநீர் மற்றும் மண்ணின் ஓட்டத்தை கட்டுப் படுத்துகின்றன.
இது பிலிப்பைன்ஸின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
இந்த நிலம் கடல் மட்டத் திலிருந்து சுமார் 1,524 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அதிசயம் – ஆனால் உண்மை! பிலிப்பைன்ஸ் நாட்டில் மலையில் விவசாயம்!

Leave a Comment