பாட்னா, ஜூலை 5 பிகாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகை முடிவு செய்தது.
இதன்படி அண்மையில் குலுக்கல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கல்லூரிக்கும் தகுதியுள்ள பேராசிரியர்களின் பெயர்கள் எழுதப்பட்ட காகித சீட்டுகள் ஒரு பாட்டிலில் போடப்பட்டன. அதில் இருந்து குலுக்கல் முறையில் ஒரு காகித சீட்டு எடுக்கப்பட்டது.
இதன்படி மகத் மகளிர் கல்லூரி முதல்வராக நாகேந்திர பிரசாத் வர்மா, பாட்னா கல்லூரி முதல்வராக அனில் குமார், பாட்னா அறிவியல் கல்லூரி முதல்வராக அல்கா, வனிஜா மகாவித்யாலயா கல்லூரி முதல்வராக சுகாலி மேத்தா, பாட்னா சட்டக் கல்லூரி முதல்வராக யோகேந்திர குமார் வர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். குலுக்கல் முறைக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ் மண்ணின் மனிதநேயம்
நடப்பு ஆண்டில்
129 பேர் உடற்கொடை
725 பேர் மறுவாழ்வு பெற்றனர்
சென்னை, ஜூலை.5- நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து உடல் உறுப்புக் கொடையில் முதலிடத்தில் உள்ளது. உறுப்புக் கொடை செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உறுப்புக் கொடை அளித்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டில் 178 பேர் உறுப்புக் கொடை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொடையாக பெற்ற உறுப்புகள் வாயிலாக ஆயிரம் பேர் மறுவாழ்வு பெற்றுள்ள னர். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், நடப்பு ஆண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 129 பேரில் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளன.கொடையாகப் பெறப்பட்ட உறுப்புகளில் 227 சிறுநீரகங்களும், 192 விழி வெண்படலங்களும், 110 கல்லீரல்களும் உரியவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 725-க்கும் மேற்பட்டோர் பலனடைந்திருப்பதாக மாநில உறுப்பு மாற்று ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி சிவா எம்.பி. பேட்டி
அனைத்து மாநிலங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கும்போது தமிழ்நாட்டில் உரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். வரும் 2026ஆம் ஆண்டு தேர்தல் ஒரு தத்துவ போர்; திராவிடம் வேரூன்றிய மண்ணில், அதன் கொள்கைக்கு மாறுபட்டவர்கள் துரோகிகள் உதவியுடன் வருகின்றனர். ஆனாலும், மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., அரசு அமையும்.