நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் என்றொன்று உண்டா? யார் எதைப் படிக்க வேண்டும், படித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனை பெற்றோர்களுக்கு உண்டா? படிப்பு என்பது, எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் நிறுத்தி விடுவதும், படித்துப் பட்டம் பெற்று விட்டால், அன்று முதல் வேலை தேடித் திரிவதும், ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப் பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவைதான் கல்வியின் தன்மையாய் இருக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1695)

Leave a Comment