ஆசிரியருக்கு திருச்செங்கோட்டில் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. இதில் 103 வயது நிறைந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் ஆத்தூர் தங்கவேலு, பொத்தனூர் க.சண்முகம் போன்றோர் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். ஆசிரியர் அவர்களுக்கு இவ்வாறு எடைக்கு எடை நாணயம், வெள்ளி, தானியம், தங்கம் உள்ளிட்ட இதர பொருள்களை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், பெரியார் உலகத்திற்கும் வழங்கிவிடுவார்.
தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்றும், என்றும் ஆசிரியர் பயணிக்கிறார்.
தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை வெள்ளி
தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம்
துலாபாரம் கண்ட தொண்டு பழம்
தந்தை பெரியார்!!
வணக்கம் நண்பர்களே!
பல்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியார் அவர்களுக்கு அவரது தொண்டர்கள் அன்பால் பாசத்தால் பகுத்தறிவினால் அவருக்கு வழங்கிய அன்பு பரிசுகள்….
3.11.57 தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளி
24.9.63 அய்யாவின் 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லால்குடியில் எடைக்கு எடை நவதானியங்கள்.
5.10.63 தஞ்சை சில்லறை வெற்றிலை வியாபாரிகளால் 35 கவுளி வெற்றிலை, ஆறு இலைக்கட்டு வழங்கப்பட்டது.
24.09.63 அன்று புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய் துவரை, கொத்துக் கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயிறு கோதுமை, அரிசி, ரூபாய் 21 கொண்ட பண முடிப்பு, கழக கொடி போட்ட 3/4 பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, அரிசி, உளுந்து, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச் சோளம், எருமை மாடு, 1000 செங்கல், விறகு 5 எடை (லோடு).
10.6.64 பெருவளப்பூரில் எடைக்கு எடை மிளகாய் .
11.9.64 எடப்பாடியில் எடைக்கு எடை எண்ணெய்.
3.10.64. மஞ்சள் மாநகராம் நமது ஈரோட்டில் எடைக்கு எடை மஞ்சள்
17.10.64 திருச்செங்கோட்டில் எடைக்கு எடை துவரம்பருப்பு .
21.10.64 திருவள்ளூர் எடைக்கு எடை காய்கறிகள் அன்பளிப்பு
25.10.64. கரூரில் பெரியாரின் எடைக்கு ஒன்றரை பங்கு பெட்சீட்
15.11.64 பெங்களூரில் எடைக்கு எடை திராட்சைப்பழம்
16.11.04 பெங்களூரில் எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள்
1.12.64 திருவாரூரில் எடைக்கு எடை அரிசி
10.12.64 பெரியாரின் எடைக்கு நிகராக பால் வழங்கப்பட்டது
13.12.64 திருப்பத்தூர் எடைக்கு எடை இரண்டு காசு நாணயங்கள்
14.12.64 திருக்கழுக்குன்றம் எடைக்கு எடை சர்க்கரை அன்பளிப்பு
10.1.65 குளித்தலையில் எடைக்கு எடை பெட்ரோல் வழங்கப்பட்டது
16.1.65 சிதம்பரத்தில் எடைக்கு எடை காப்பிக் கொட்டை வழங்குதல்
18.1.65 பண்ருட்டியில் எடைக்கு எடை பிஸ்கட் வழங்கப்பட்டது
19.1.65 அரசாங்க நல்லூரில் எடைக்கு எடை மணிலா (பாமாயில்) எண்ணெய் வழங்கப்பட்டது
21.1.65 குடியாத்தத்தில் எடைக்கு எடை கைத்தறி நூல் வழங்கப்பட்டது.
22.1.65 செங்கம் – எடைக்கு எடை நெல் வழங்கியது.
23.1.65 அனந்தபுரம் எடைக்கு எடை நெல்
1.5.65 வள்ளியூரில் பெரியாரின் எடைக்கு இரு மடங்கு வாழைக்காய்.
2.5.65 தூத்துக்குடி எடைக்கு எடை பருப்பு, மற்றும் எடைக்கு எடை உப்பு.
16.2.70 அலங்காநல்லூர் எடைக்கு எடை சர்க்கரை பரிசளிக்கப் பட்டது.
21.9.70 பெண்ணாடம் எடைக்கு எடை நெல் வெங்காயம் உப்பு வழங்கப்பட்டது
8.7.72 இளந்தங்குழி – எடைக்கு எடை நெல் வழங்கப்பட்டது
தொடர்ந்து பேசுவோம். நன்றி வணக்கம்
அன்புடன்,
– பெரியசாமி பி என் எம்.