பொதுத்துறை வங்கியான இந்திய மத்திய வங்கியுடன் (சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா) 2025-2026ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 4,500 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. வங்கிப் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு இது அருமையான வாய்ப்பாக அமைகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இணைய வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். சென்ட்ரல் பேங்க் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நாடு முழுவதும் இருந்து 4,500 தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 202 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொழிற்பயிற்சி விவரங்கள்
தொழிற்பயிற்சியாளர்கள் சட்டம், 1961 கீழ் ஒன்றிய அரசின் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பணிக்கான அனுபவத்தை பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் இப்பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, 1 ஆண்டு வங்கி பணிக்கான தொழிற்பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 2025-26ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர்: வங்கி தொழிற்பயிற்சி (Apprentices).
காலிப்பணியிடங்கள்: 4,500
இவை எஸ்சி – 688 , எஸ்டி – 382, ஒபிசி – 1036, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 450, பொதுப்பிரிவு – 1944 என நிரப்பப்படுகிறது.