பா.ஜ.க., ஆர்.எஸ்.எசுக்கு மனுஸ்மிருதி மட்டுமே தேவை
பாஜக, RSS-க்கு அரசமைப்பு தேவையில்லை என்றும் ‘மனுஸ்மிருதி’ மட்டுமே தேவை எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார். அரசமைப்பில் உள்ள சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற ஆகிய வார்த்தைகளை அரசமைப்பில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என RSS அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமர்நாத் யாத்திரை…
ஆர்வம் காட்டாத பக்தர்கள்!
ஆர்வம் காட்டாத பக்தர்கள்!
பஹல்காம் தாக்குதல் சம்பவம் காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு யாத்திரைக்கு 10% பக்தர்கள் குறைவாக பதிவு செய்திருப்பதாக ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். இதற்கு பஹல்காம் தாக்குதல் அச்சமும் ஒரு காரணம் என அவர் கூறியுள்ளார்.