கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

19.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* யார் அமைச்சராக இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்புகிறார்? இதே போன்று மோடி அரசை குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்ப முடியுமா? என தலையங்கத்தில் ஆளுநருக்கு குட்டு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* பொதுத்துறை நிறுவனங்களை அழித்து தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு என ராகுல் காந்தி குற்றச் சாட்டு.

* ‘எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் விட்டுத்தர தயாராக இருந்தால், 2024இல் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன’ என மாநிலங்களவை எம்.பி. கபில்சிபில் கூறியுள்ளார்.

* நீட் தேர்வு வசதி படைத்த, கோச்சிங் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிறார் மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* உ.பி. புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், இஸ்லாமிய கூலித் தொழிலாளி மரத்தில் கட்டி வைக்கப்பட்டு, அடித்து, மொட்டை அடிக்கப்பட்டு, ‘ஜெய் சிறீ ராம்’ என்று முழங்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ககோட் காவல் நிலையப் பொறுப்பாளர் அமர் சிங், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரை சிறைக்கு அனுப்பியதற்காகவும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* அமெரிக்காவில் பணம் செலுத்தும் பார்வையாளர் களுக்கு பிரசங்கம் செய்வதற்கு பதிலாக – மணிப்பூருக்கு செல்ல முடியுமா? என உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு சவால்.

 தி இந்து

* சமூக கொள்கையின் தரமான அம்சங்களைக் கையாள்வதற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையும், ஒழுக்கமான ஊதியம் மற்றும் கண்ணியமான வேலை நிலைமைகளை உறுதி செய்யும் தொழில்மயமாக்கல் உத்தியும் தமிழ்நாட்டிற்குத் தேவை என்கிறார் கட்டுரை யாளர் கலையரசன்.

டைம்ஸ் ஆப் இந்தியா

* பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முன்னிறுத்தி தலைவர்களின் பெயரை மாற்றம் செய்கிறது என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி குற்றச்சாட்டு.

* தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூக நீதிப் பேரவையின் 30 பேர் கொண்ட குழுவிடம் இருந்து 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை ஏற்க கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மறுப்பு. தந்தை  பெரியாரின் ஒளிப்படத்தை குழு அளித்தது. அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

* கோவில் சுவர்களில் தங்க முலாம் பூசுவதில் ஊழல் நடந்ததாக கேதார்நாத்தின் மூத்த பூசாரி குற்றம் சாட்டி யுள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *