சென்னை, ஜூன் 27- இந்தியாவின் மிகப்பெரிய சிறு நிதி வங்கியாகிய ஏ.யூ. சிறு நிதி வங்கி, இந்தியாவில் ரூ. 2,000 மதிப்புள்ள இலவச டாக்ஸி முன்பதிவு சேவைகளை வழங்குவதற்காக, இந்தியாவின் முன்னணி பயண தளமாகிய மேக் மை ட்ரிப் உடன் வாழ்க்கை முறை சார்ந்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இந்தியா வருகை தரும் என்.ஆர்.அய். பயணிகளுக்கான வசதிப் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில், அவர்களது இந்தியப் பயணமானது தொடக்கம் முதல் நேர்மறையாகவும், வசதியுடனும் அமைய வேண்டும் என்பதற்காக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏ.யூ. சிறு நிதி வங்கியின் பிரீமியம் வங்கி திட்டங்களான ஏ.யூ. அய்வி, ஏ.யூ. எடர்னிட்டி, ஏ.யூ. ராயல் ஆகியவை இச்சேவை மூலம் என்.ஆர்.அய். வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏ.யூ. சிறு நிதி வங்கியின் நிர்வாக இயக்குநர் உத்தம் திப்ரேவால் இது குறித்து கூறுகையில்:-
“இன்றைய சூழலில் என்.ஆர்.அய். வாடிக்கையாளர்கள் வெறும் நிதி இலாபங்களை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. கூடுதலாக வசதி, கவனிப்பு மற்றும் நேர்மறையான அனுபவம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். ஏ.யூ. வங்கியில், உயர் வட்டி விகிதங்கள், பூஜ்ய நாணய பரிமாற்றக் கட்டணங்கள் மற்றும் தனிப்பயன் டிஜிட்டல் ஆதரவு ஆகிய முழுமையான வங்கிச் சேவைகளை என்.ஆர்.அய். வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.