எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு 29ஆம் தேதி வரை அவகாசம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன்.27- நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, பல் மருத்துவப் பட்டப் படிப்பு (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ‘நீட்’ நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்

அந்த வகையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் (மே) 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 14-ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் கலைஞர் நகர் இ.எஸ்.அய். மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

பல் மருத்துவம்

பி.டி.எஸ் படிப்பை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை இணைய வழி விண்ணப்ப பதிவு கடந்த 5-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 25-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று, மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க வருகிற 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கி மருத்துவ மாணவர் சேர்க்கை குழு உத்தரவிட்டுள்ளது

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *