அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் 3 சட்ட மன்ற உறுப்பினர்களை அக்கட்சி யில் இருந்து நீக்கி தலைமை உத்தர விட்டுள்ளது. கட்சியின் கொள்கை களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங் களவைத் தேர்தலில் பாஜக தலைமை வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 7 பேரில் நீக்கப்பட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
வால்பாறை தொகுதியில் இடைத் தேர்தல் கிடையாது
கடந்த ஜூன் 21-ஆம் தேதி வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுற்றார். இந்நிலையில், இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2026, மே 9 உடன் தற்போதையை தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக் காலம் முடியவுள்ளது. எனவே, தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக் குள் சட்டமன்ற உறுப்பினர் மறைந் தால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப் பில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அ.தி.மு.க. நிகழ்ச்சியில் அரைகுறை ஆடையுடன் நடனம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில், இந்த மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா மேடையில் அரைகுறை ஆடை களுடன் பெண்கள் நடனமாடியுள் ளனர். பெண்கள் பலரும் இருந்த இக்கூட்டத்தில் கவர்ச்சி நடனம் இடம் பெற்றதால், பலரும் முகம் சுளித்தனர். இதுதொடர்பான காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.