வடகரை, ஜூன் 25 கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 21.6.2025 அன்று புழல், வடகரையில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர் ந.கஜேந்திரன் கடவுள் மறுப்பு கூற கூட்டம் இனிதே தொடங்கியது.
இக்கூட்டத்தில் நோக்கவுரை ஆற்றிய கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், இளைஞரணியின் வேலை திட்டங்களை பற்றி விரிவாக பேசினார், குறிப்பாக மாவட்டதில் உண்மை வாசகர் வட்டம் தொடங்கி மாதம் ஒருமுறை அரங்க கூட்டம் தொடர்ந்து நடத்துவது, மாவட்டத்தில் பெரியார் நூலகம் அமைப்பது என்று பேசினார்,,
அதன் பிறகு மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், புழல் ஒன்றிய கழக தலைவர் ஜெகத் விஜயகுமார், புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார், புழல் நகர தலைவர் சோமு ஆகியோர் பேசிய பிறகு இறுதியாக கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கருத் துரை வழங்கினார்.
அவர் பேசும்போது இளைஞரணியை வலுப் படுத்த இளைஞரணி தோழர்கள் வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ இளைஞர்களை சந்திக்கவேண்டும் என்றும் அதேபோல புதுப் புது இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து களப்பணியில் இருந்தால்தான் இயக்கம் சிறப்பாக செயல்படும் என்றும் பேசினார்
இறுதியாக மாவட்ட கழக செயலாளர் ஜெ.பாஸ் கர் நன்றி உரை கூற கூட் டம் முடிந்தது.
தீர்மானங்கள்
உண்மை வாசகர் வட்டம் தொடங்கி மாதம் ஒருமுறை அரங்க கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
மாவட்டத்தில் பெரியார் நூலகம் அமைப்பது என தீர்மானிக் கப்பட்டது.