மீரட், ஜூன்.24- உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சைகாக சேர்க் கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு கடந்த 20-ஆம் தேதி, காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக, ஒரு 15 வயது சிறுமி அனு மதிக்கப்பட்டாள். அவளை கவனித்துக்கொள்ள தாயார் வந்திருந்தார்.
அதே வார்டில், உத்தர காண்ட் மாநிலத்தை சேர்ந்த மோஹித் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள அவருடைய சகோ தரர் ரோஹித் (வயது 20) வந்திருந்தார்.
20-ஆம் தேதி இரவு, 15 வயது சிறுமி, மருத்துவ மனை கழிவறைக்கு சென் றாள். அப்போது வாலிபர் ரோஹித்தும் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்தார். கழிவறையில் வைத்து சிறுமியை கற்பழித்தார். எதிர்ப்பு தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, அவர் இந்த பாதக செயலை செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த பிரச்சினையை சொல்லவில்லை.
நேற்று முன்தினம் (22.6.2025) மாலை, தன் தாயாரிடம் இந்த கொடூரத்தை தெரிவித்தாள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.