டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு புரதச் சத்து மிக்க உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 20 டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர் களுக்கு புரதச் சத்து மிக்க உணவு வழங்கும் திட் டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

புரதச் சத்து மிக்க உணவு

அமைச்சர் திரு.மா.சுப்பிர மணியன்  18.06.2025 அன்று சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில்,  டயாலிசிஸ் சிகிச்சை பெறு பவர்களுக்கு சிறப்பு புரதச்சத்து மிக்க உணவு வழங்கும் திட் டத்தினை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழ்நாட்டில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு புரதச் சத்து நிறைந்த உணவு வழங்கும் திட்டம் தொடங் கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 9180 பேருக்கு டயாலிசிஸிஸ் வழங்கப்பட்டு வருகிறது. டயாலிசிஸ் சேவை என் பது  முதலமைச்சர் வழி காட்டு தலின்படி,  இலவசமாக வழங் கப்படும் என்பதை தொடங்கி காப்பீட்டு திட்டத்தில் இல வசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தனியார் மருத்துவமனைகளில் வாரத்திற்கு 2 முறை டயாலிசிஸ் செய்யப்படும்போது ரூ.2 ஆயிரம் என்கின்ற வகையில் மாதத்திற்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். ஏழை, எளியவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு என்று வந்தாலே அவர்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்கின்ற அளவில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வந்தனர். இந்த நிலையில்  முதலமைச்சர் டயாலிசிஸ் சேவையை இலவசமாக வழங்கும் பணியினை தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டயாலிசிஸ் கருவிகள்

இந்த அரசு பொறுப்பு ஏற்பதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதிலும் 985 டயாலிசிஸ் யூனிட்கள் பயன்பாட்டில் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 302 புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆக தமிழ்நாடு முழுவதிலும் 139 அரசு மருத்துவமனைகளில் 1287 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக் கிறது. இதில் தினந்தோறும் 9180 பேர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுவாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்றதற்கு பிறகு மிகப் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சோர்விற்கு உள்ளாகிறார்கள். சோர்விற்கு உள்ளாகும் டயாலிசிஸ் நோயாளர்களுக்கு உணவு பொருட்கள் உடனடியாக வழங்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகிறது. அந்தவகையில்   முதலமைச்சர்    வழிகாட்டுதலின்படி, 100 மிலி பால், 2 முட்டை, கருப்பு/வெள்ளை சுண்டல், 20 கிராம் எடையுள்ள 3 பிஸ்கட், புரதம் 27 கிராம்/400 KCAL ஆகிய  உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும்

முதற்கட்டமாக சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது தொடங்கியிருக்கிறோம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் ஒரு சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இன்றைக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவிலேயே ஏன் உலக ளவில் டயாலிசிஸ் நோயாளர் களுக்கு புரதச்சத்து உணவு வழங்கும் திட்டம் என்பது தொடர்ந்து வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும். எனவே இந்த திட்டத்தை தொடங்கி வைப் பத்தில் பெருமை அடைகிறோம்.

நகர்ப்புற நல வாழ்வு மய்யம்

தமிழ்நாட்டில் 207 இடங் களில் கட்டப்பட்டுள்ள நகர்ப் புற நலவாழ்வு மய்யங்களை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டின் புதிய மருத்துவக் கட்டமைப்பு என்கின்ற வகையில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதேபோல் 2022-23 இல் 50 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாகும் என்று அறிவித்தார்கள். அந்தவகையில் அந்த மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்டு பணியாளர்கள் நியமனமும் முடிவுற்று வரும் நிலையில் வரும் ஜூலை 3ஆம் தேதி முதலமைச்சர்   திறந்து வைக்கிறார். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *