பெங்களூருவில் கலைஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

பெங்களூரு, ஜூன்18- கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து காணொலி வாயிலாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிக எழுச் சியுடன் 11.6.2025 புதன் கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி கொண்டாடப்பட்டது.

தோழர் சண்முகம் தமிழ் மொழி வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் பாபு சசிதரன் அனைவரையும் வரவேற் புரை நிகழ்த்தினார். இரா.முல்லைக்கோ தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

கலைஞர் சிறப்பு கவி யரங்கம் “ஒரே கலைஞர்” என்னும் தலைப்பில் கவியரங்கம் தொடங்கியது. கவிஞன் ஆரூர் சுகுமார், கவிஞர் கண்ணதாசதாசன், கவிஞர் கலைச்செல்வன் ஆகியோர் கலைஞரின் பல்வேறு அரிய செயல்பாடுகளை கவிதை வீச்சுடன் கவி பாடினார்கள். கவிஞர் கிருஷ்ணகுமாரி, கவிஞர் களை அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார்.

மூன்றாம் நிகழ் வாக “கலைஞரின் சமூகச் சிந்தனையும் செயல்பாடுகளும்” என்னும் தலைப்பில் தி.மு.க. இளம் சிறப்பு பேச்சாளர் வாலாசா இரா.தமிழ்வாணன் அரிய உரையினை சிறப்புடன் பேசினார்.

நிமிர் இலக்கிய வட் டத்தின் நிறுவனர் கவிஞர் பாபு சசிதரன், கலைஞரின் அரிய தொண்டினை ஆட்சி பொறுப்பு வருமுன்னும், ஆட்சி பொறுப்பு வந்த பின்னும் அவரது செயல்திட்ட வரலாற்று பதிவுகளை விளக்கக் கூடிய கருத்துரை வழங்கி சிறப்பித்தார்.

நான்காம் அமர்வில் கவிஞர்கள் விஜயன், சுசித்ரா, முகவை திரு நாதன், பொதிகை மு.செல்வராசு, சண்முகம், ஆய்வாளர் பேரா.பி.புருசோத்தமன், கவிஞர் ஜவகர், கவிஞர் தினேஷ் ஆகியோர் நிகழ்வின் சிறப்புகளையும், கலைஞரின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். சண்முகம் கவிதை பாடி சிறப்பித்தார்.

கவிஞர் பாபு சசிதர னின் ஒருங்கிணைந்த நெறியாளுமையின் போது அனைவரையும் அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார்.

நிறைவாக நிகழ்ச்சி சிறப்புடன் நடத்திட தோன்றாத் துணையுடன் விளங்கிய இன எழுச்சி பாவலராம், கருநாடக மாநிலத் துணைத் தலைவர் சே.குணவேந்தன் நன்றியுரை நிகழ்த்தி நிகழ் வினை நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *