மதுரையில் முப்பெரும் விழாவினை திறந்த வெளி மாநாடாக நடத்த முடிவு மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
3 Min Read

மதுரை, ஜூன் 18- மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துற வாடல் கூட்டம் 16.6.2025 அன்று மாலை 6 மணிக்கு பெரியார்-வீரமணி அரங்கில் உற்சாகம் பொங்க நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வப் பெரியார் வரவேற்புரை வழங்கினார்.மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவு ரையாற்றினார்.கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ்  தலைமை வகித்தார்.

நமது குடும்பங்களின்தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் பெரியார் உலகத்திற்கு முதற்கட்டமாக ஒரு இலட்சம் நிதி தாருங்கள் என உருக்கமிகு அறிக்கை விடுத்துள்ளார்கள். எங்கள் குடும்பத்தின்சார்பில் ஒரு இலட்சம் வழங்குகிறேன் என தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் அறிவித்தார்.

பின்பு, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ஒளிப்பட கலைஞர் இராதா தனது சார்பில் ஒரு இலட்சம் எனக்கூறி 50,000/ரூபாயினை வழங்கினார். திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர் மு.சித்தார்த்தன் குடும்பத்துடன் வந்து ஒரு இலட்சம் காசோலையாக வழங்கினார். சந்திரன் கமல் ரூ.5,000 வழங்கினார். மதுரை சடகோபன் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.100 வழங்கினார்.

மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட துணைத்தலைவர் நா.முருகேசன், கழக சொற்பொழிவாளர் அ.வேங்கைமாறன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் வழங்குவதாக அறிவித்தனர்.

நிறைவாக பேசிய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனது உரையில், நன்கொடை வழங்கிய, அறிவித்த, வழங்கிய தோழர்களுக்கு உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரையில் எந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வாய்ப்பு அளித்தாலும் வெற்றிகரமாக நடைபெற உற்சாகமாக உழைக்கின்ற உங்களை காணும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் .தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீதும், கழகத்தின் மீதும் தாங்கள் கொண்டுள்ள பற்றினை, பாசத்தினை, கண்டு பெருமை அடைகிறேன் .

தற்போது தமிழர்தலைவர் முன் னெடுத்துள்ள பெரியார் உலகமானது தந்தை பெரியாரை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்லும் மாபெரும் திட்டமாகும் தமிழர் தலைவர் எப்பொழுதும் கனவு திட்டமாக எதையும் எண்ணுவதில்லை

ஒவ்வொரு திட்டங்களையும் லட்சிய திட்டங்களாக அறிவித்து வெற்றி வாகை சூடுவார்கள். இந்த காலகட்டத்தில் நம்முடைய பொறியாளர் மனோகரன் போன்றவர்கள் இல்லையே என்பது என்கிற வருத்தம் அளிக்கிறது. நமது தமிழர் தலைவர் 15க்கு மேற்பட்ட பெருமக்களின் நூற்றாண்டுகளை கொண்டாடி இருக்கிறார் அவர்களது உழைப்புக்கும், முயற்சிக்கும் நாம் அனைவரும் உற்ற துணையாக இருப்போம் என நெகிழ்ச்சிடன் குறிப்பிட்டார்.

காப்பாளர் சே.முனியசாமி, மாநில வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் நா.கணேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு, மாநில ப.க.அமைப்பாளர் சி.மகேந்திரன், மந்திரமா? தந்திரமா?  நிகழ்ச்சியாளர் பேரா.சுப.பெரியார்பித்தன், உளவியலாளர் வெண்ணிலா, மாநகர் மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு, மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் த.ம.எரிமலை மாவட்ட ப.க. தலைவர் ச.பால்ராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் வைரமுத்து, மாவட்டத்தலைவர் அமர்நாத், கழக பொதுக்குழு உறுப்பினர் ராக்குதங்கம் ஆகியோர் கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார்கள்.

கழக மாவட்ட துணைச்செயலாளர் க.சிவா நன்றி கூறினார்.

 தீர்மானங்கள்

14.7.2025 அன்று மதுரை மாநகர் புதூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா நூல்கள் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழாபினை திறந்தவெளி மாநாடாக மிகுந்த எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழாவை மதுரை மாநகரில் நடத் துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவருக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் சிறப்பான வரவேற்பளிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் நமக்கு அளித்த அறிவாயுதம் விடுதலை நாளேடு 91 ஆம் ஆண்டில் தடம் பதித்து வெற்றி நடை போடும் விடுதலைக்கு 63 ஆண்டுகளாக ஆசிரிய ராக தொண்டாற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது

உலகம் பெரியார் மயம் பெரியார் உலக மயம் என்ற முன்னோக்கில் திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடைகளை திரட்டி அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது

2025 ஜூலை மாதம் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் குற்றாலத்தில் 46ஆவது ஆண்டாக நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இருபால் மாண வர்கள் இளைஞர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது தீர்மானங்கள் அனைத்தும் கழகத் தோழர்களால் கர ஒலி எழுப்பி வரவேற்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *