14 வயதில் இப்படி ஒரு சாதனையா?

2 Min Read

டெக்சாஸ், ஜூன் 15- மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் அதிகளவில் மனித இறப்புக்கு காரணமாக அமைகிறது. இந்த அபாயத்தை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்புகளை குறைக்கலாம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த வெளிநாடுவாழ் இந்திய மாணவரான 14 வயது சித்தார்த் நந்தியாலா, 7 வினாடிகளில் இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியும் ஒரு புரட்சிகரமான  அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.

இந்த செயலி ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், இதய செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகள், கரோனரி தமனி நோய்கள் மற்றும் இதய வால்வு செயல்பாடுகள் ஆகியவற்றை அடையாளம் காட்டுகிறது.

பல மாதங்கள்

இதற்காக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து தரவுகளைச் சேகரிப்பதற்கு சித்தார்த் பல மாதங்களை செலவிட்டிருக்கிறார். தனது செயலியை மேம்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சித்தார்த்தின் செயலிக்கான மருத்துவப் பரிசோதனைகள் அமெரிக்காவில் உள்ள நோயாளிகளையும், இந்தியாவில் உள்ள நோயாளிகளையும் உள்ளடக்கியது.

96 சதவீதம் துல்லியம்

மேலும் இந்த செயலி இதயத்தின் அசாதாரண செயல்பாடுகளைக் கண்டறிவதில் 96 சத வீதத்துக்கும் அதிகமான துல்லியத்தை அடைந்ததாக அவர் தெரிவித்தார். இந்த செயலி பயிற்சி பெற்ற பணியாளர்களால் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள் ளது. இது சித்தார்த் நந்தியாலாவின் முதல் தொழில்நுட்ப படைப்பு அல்ல.

இதற்கு முன்பு குறைந்த விலையில் செயற்கை கையை வடிவமைத்துள்ளார். மாணவர்களுக் கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் ஒரு நிறுவனத்தை வழி நடத்தும் சித்தார்த், நுரையீரல் தொடர்பான நோய்கள், நிமோனியா ஆகியவற்றை கண்டறிய, செயலியின் திறன்களை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசில் 1,910 வேலை டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

அய்டிஅய், டிப்ளமோ, 10ஆம் வகுப்பு தகுதிக்கான (Combined Technical Services) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 1,910 காலிப் பணியிடங்களுக்கு மேற்கண்ட கல்வித் தகுதியை உடைய 18 வயது நிரம்பியவர்கள் ஜூன் 13 முதல் ஜூலை 2ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஊதியமாக ரூ.18,000 – ரூ.56,900 மற்றும் ரூ.21,100 67,100 என டிஎன்பிஎஸ்சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *