ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2034ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருமாம் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் அறிவிப்பால் சர்ச்சை

1 Min Read

டில்லி, ஜூலை 11  ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் 2034ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூட்டுக்குழுவின் தலைவர் தன்னிச்சையாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பாஜக அல்லாத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தன்னிச்சையான அறிவிப்பு

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அமைக்கப்பட்டது, இக்குழு இதுவரை 7 முறை கூடியுள்ளது. இக்கூட்டுக்குழு பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நேரில் சென்று கருத்து கேட்பு நடத்தியுள்ளது, மற்ற மாநிலங்களுக்கு இன்னும் செல்லவில்லை. கூட்டுக்குழுவின் கால அவகாசம் மழைக்கால கூட்டத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதனை மேலும் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கூட்டுக் குழுவின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பி.பி.சவுத்ரி 2034-இல் நாடுமுழுதும் ஒரே தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கூட்டுக்குழு தலைவரின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *