தமிழ்நாட்டில் ஜூன் 10, 11ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூன்8- தமிழ்நாட்டில் வரும்  10-ஆம் தேதி சில மாவட் டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை ஆய்வு மய்யம்  தெரிவித்து உள்ளது.

11ஆம் தேதி  தர்ம புரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவலில்,  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப் படி, 9.6.2025 அன்று  தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 10-ஆம் தேதி  தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த மழையானது,  கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 11-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணா மலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன்  12-06-2025: தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவலை தெரிவித்துள்ளது.

மேலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டி யும் இருக்கக்கூடும் இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *