கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.6.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ‘வேற்றுமையில் ஒற்றுமை’ தான் தேசிய மொழி – இந்தியாவின் தேசிய மொழி என்ன என்ற கேள்விக்கு ஸ்பெயினில் திமுக எம்.பி கனிமொழி தகுந்த பதில்.
* உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்; 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: 13,988 பேர் கவுன்சிலராக வாய்ப்பு
* மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித் துவம் அளிக்கும் மசோதாவிற்கு, நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து, ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கனடா ஜி7 உச்சி மாநாட்டில் மோடிக்கு அழைப்பு இல்லை? ‘ராஜதந்திர குளறுபடி’ என காங். விமர்சனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியா, பாகிஸ்தான் போர்: டிரம்ப் தொலைபேசியில் அழைத்தார், மோடி சரணடைந்தார்: ராகுல் காந்தி கடும் விளாசல்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 85% இட ஒதுக்கீடு: லடாக்கிற்கு புதிய இடஒதுக்கீடு கொள் கையை ஒன்றிய மோடி அரசு அறிவித்துள்ளது, 85% வேலைகள் உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
* துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

தி இந்து:

* அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்க ஒன்றிய அரசு தீர்மானத்தை கொண்டு வர உள்ளது.

தி டெலிகிராப்:

* பீகார் முதலமைச்சர் பதவிக்கு சிராக் பஸ்வான் போட்டியிடுகிறாரா? ஒன்றிய அமைச்சரும் எல்ஜேபி தலைவருமான சிராக் பாஸ்வான் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனது விருப்பத்தை தெரி வித்தார்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *