மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 2ஆவது சகோதரியான சரோஜா நேற்று முன்தினம் (29.5.2025) காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்த நிலையில் வைகோ நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
வைகோ அவர்களின் சகோதரி சரோஜா மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் 29.5.2025 அன்று இரவு வைகோவிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.