நவீன முறையில் கற்பித்தல் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 29- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எளிதில் பாடத்தை புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு ஆசிரியா்கள் புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போதைய காலச்சூழலுக்கேற்ப தொழில்நுட்பங்கள் உதவிகொண்டு மாணவா்களை மய்யமாக கொண்ட கற்றல் சூழல்களை வடிவமைக்கின்றனா். இதனால் மாணவா்கள் வகுப்பறையில் மிகவும் ஆா்வத்துடன் கல்வி பயில்வதுடன், அவா்களின் கற்றல் அடைவுகளும் மேம்பட்டுள்ளன.

அத்தகைய ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் விதமாக 2025-2026-ஆம் கல்வியாண்டு முதல் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் மாணவா்களின் நலனுக்காக பாடுபடும் ஆசிரியா்கள் உற்சாகம் பெறுவா்.

அதனுடன், அவா்களைப் பாா்த்து மற்ற ஆசிரியா்களும் இதேபோல் புதிய முறைகளில் பாடங்களை கற்றுதர முன்வருவாா்கள். இது மாணவா்களுக்கு வகுப்பறை கல்வியை சுவாரசியமாக்கும். இதன்மூலம் மாணவா்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களில் ஒரு மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 போ் தோ்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தகுதியானவா்களை மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், அரசு கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆகியோா் அடங்கிய ஒரு உயா்நிலைக் குழு தோ்ந்தெடுக்கும்.

அவ்வாறு தோ்வான 380 ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக ரூ.1.2 லட்சம் நிதியை தேசிய ஆசிரியா் நல நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *