சென்னை, மே 28– தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருக்கிறது என்று ஆங்கில வார இதழ் கணித்துள்ளது.
பாதுகாப்பு வளையம்
மே 7, 2021 அன்று மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற போது, அவர் தனது நீண்ட பொதுவாழ்வில் முதல் முறையாக ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பாரம்பரியத் திற்கான குறிப்பு வெறும் பகட்டான வார்த்தை அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வலுவான நிலையில் இருப்பது மட்டுமல்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசியலில் தனக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளார் என்றே கூறலாம்.
நலத்திட்டங்கள், குறியீடுகள் மற்றும் கூட்டாட்சி எதிர்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு அவரது அடையாளத்தை உள்ளூர் நிர்வாகம் மற்றும் அரசியல் யதார்த்தத்தின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பெரிய அரசியல் – சித்தாந்த ஒளிவட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கட்டுக்கோப்பாக உள்ளது.
இளைஞர்கள் ஈர்ப்பு
தமிழ்நாட்டு அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சீரான ஒருங்கிணைப்பு இல்லை. நிலையற்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு அதிக இழுபறி உடன் நீள்கிறது.
நடிகர் விஜய், நிச்சயமாக, அரசியலில் ஒரு எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவரது கட்சி அதிகளவில் இளைஞர்களை ஈர்த்துள்ளது. ஆனால் தேர்தல் ரீதியாக அது வாக்குகளாக மாறுமா? என்பது தெரியவில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. என்ற சூரிய உதய சக்தியால் ஓரளவு இளைஞர்களை ஈர்த்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமைத்துவம், “கூட்டாட்சிக்கு தமிழ்நாடு வழிகாட்டியது” என்று எழுத்தாளரும், தி.மு.க. ஊடகப் பிரிவின் இணைச் செயலாளருமான சல்மா கூறியுள்ளார்.
முன்னிலையில் தி.மு.க.
நீட், ஹிந்தி திணிப்பு, ஆளுநரின் தலையீடு போன்ற பிரச்சினைகளில் பா.ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசுக்கு கூர்மையான எதிர்ப்பை தி.மு.க. பதிவு செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, த.வெ.க. போதுமான வாக்குகளைப் பிரித்தாலும், அ.தி.மு.க. – பா.ஜனதா பெறும் வாக்குகளை கருத்தில் கொண்டாலும், தமிழ்நாடு தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.