தமிழ்நாடு ரேசன் கடைகளில் பில் போடும் எந்திரத்துடன் மின்தராசு இணைப்பு இனி சரியான எடையில் பொருள்கள் கிடைக்கும்

2 Min Read

சென்னை, மே. 26- இனி ரேசன் கடைகளில் சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக பில் போடும் எந்திரத்து டன், மின்தராசு இணைக்கப்பட்டு உள்ளது. எடை குறைப்பு முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரசீது

தமிழ்நாடு முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள் 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேசன் கடைகளில் பி.ஓ.எஸ். என்னும் மின்னணு கருவி மூலம் பொருட்கள் வினியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

சிக்கல்

இந்த மின்னணு எந்திரத்தில் ரேசன் அட்டை உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் பி.ஓ.எஸ். கருவியின் மென்பொருள் வடிவ மைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது பி.ஓ.எஸ். கருவியுடன் மின்னணு தராசும் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது இனிபொருட் கள் எடை எந்தளவுக்கு வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் பில்லும் வரும். எனவே சரியான எடைக்கு பொருட்கள் வைக்க வேண் டிய சூழ்நிலைக்கு ரேசன் கடை ஊழியர்கள் தள்ளப் பட்டு உள்ளனர். 20 கிலோ அரிசி வைத்தால் தான் 20 கிலோ அரிசி பில் வரும். எனவே எடை குறைந்தா லும் சிக்கல், கூடினாலும் சிக்கல் தான்.

சோதனை அடிப்படை

இந்த புதிய நடைமுறை தற்போது சோதனை அடிப்படையில் சென்னையில் உள்ள சில ரேசன் கடைகளில் மட்டும் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக ரேசன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு அரிசி, 2 அரிசி

அதாவது மின்னணு தராசில் எடை மிகவும் துல்லியமாக இருந்தால் மட்டுமே பி.ஓ.எஸ். கருவியில் பில் போட முடிகிறது. இதனால் எடையை சரி செய்ய ஒரு எண்ணிக்கையில் அரிசி, இரண்டு அரிசி, ஒரு சர்க்கரை, 2 சர்க்கரை என வைக்க வேண்டி உள்ளது. அதனால் எடை போடுவதில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது என்று குறை கூறுகின்றனர். ஆனால் பொதுமக்களை பொறுத்தவரை தராசில் பொருட்கள் அளவு சரியாக இருந்து என்ன பயன்? அது நமது பைக்கு முழுமையாக வரவேண்டும் அல்லவா? எனவே முழு எடையுடன் மக்களுக்கு பொருட்கள் சேர வேண்டுமென்றால் பாக்கெட் போட்டு வழங்குவது தான் சிறப்பு. ஜி.எஸ்.டி.யை காரணம் காட்டி இந்ததிட்டத்தை தமிழக அரசு நிறுத்தக்கூடாது என்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *