நட்ட ஈடு ரூ.3,400 கோடி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களூருவில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023இல் கையகப்படுத்தப் பட்ட மைசூர் அரச குடும்ப நிலத்திற்கு ரூ.3,400 கோடி இழப்பீடு வழங்க கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
எந்த மன்னனும் காடு திருத்தி கழனியாக்கி மதிக்கத்தக்க நிலமாக மாற்றியிருக்கப் போவ தில்லை. எனவே இந்த மன்னர் வகையறா 15.39 ஏக்கர் நிலத்தை யார் யாரிடமிருந்து அபகரித்ததோ தெரியவில்லை. அதற்கு ஒரு ஏக்கருக்கு சுமார் 221 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச் சொல்கிறது உச்சநீதிமன்றம்.
ஆனால் தலைமுறை தலை முறை யாக மக்கள் வசிக்கிற / சாகுபடி செய்கிற இடங்களையும் நிலங்களையும் வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் அரசு கையகப் படுத்தும்போது கொடுக்கும் இழப்பீடு பாலிடாயில் வாங்கவே பத்தாது என்கிற நிலைமைதான் – ஆதவன் தீட்சண்யா, பொதுச் செயலாளர், த.மு.எ.க.ச.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *