மருத்துவர் ச. அறிவுக்கண்ணு
பெங்களூரு
பெரம்பூர் நாத்திக
பெருமகனே!
காஞ்சி
நேத்தாஜிநகர்
வெகு மானமே!
உங்கள் நூறாம் ஆண்டு அகவை
நிறைவு இன்று.
உங்களை வாழ்த்தக் கூடினோம்
குடும்பமாய் இன்று
ஈரோட்டுச் சிங்கத்தின் ஈடில்லா
தொண்டரே!
தன்மான உணர்ச்சி
தளரா
தமிழின காவலரின்
தளபதியே!
எதிர்நீச்சல் போட்டு
ஏற்றதம் கொள்கைதனை
இறுதி மூச்சுவரை
இறுக்கிப் பிடித்தவரே
கருத்துக்கணிப்பிலே
கலங்கரை விளக்கானீர்.
இனி கேட்பது எந்நாளோ உந்தன்
நாத்திக கோடை இடி
முழக்கத்தை!
பகைக்கு அஞ்சா
பகுத்தறிவுப் பாசறையே!
வீண்வார்த்தை நீக்கி
விழிப்புணர்ச்சி கொண்டவரே!
அடையாளம் கண்டு
அக நட்பு கொள்பவரே!
விடுதலையும்
கையுமாய்
வீட்டை வலம் வந்தாய் நீ!
திடல்,திடல் என தினமும் உச்சரித்தாய்
ஜாதி மத சாத்திரத்தை
நித்தம் சாலையோரப் பேச்சில் வென்றாய்
இல்லத்தரசியாம்
இந்திராணி கரம்
பிடித்தாய்
கடிந்து இடித்துரைத்து
பேசும் கட்டுப்பாடானாய்
நல்லதோர் குடும்பம்
செய்து பல்கலைக்
கழக பதிவாளர் நீயானாய்.
சதம் கடந்த சபாபதியாரே!
பலத்தால் உயர்ந்தோர் பலர்.
பரம்பரையால்
உயர்ந்தோர் சிலர்.
உழைப்பால் உயர்ந்தவர் சொற்ப
சிலர்.
அந்த சொற்ப சிலரில்
நீங்களோ நிகரில்லா சீலர்
உருவச்சிலை அமைத்தோம்
இணையில்லா
இணையர்க்கு
உணர்த்திடவே
உங்கள் சேவையை
இவ்வுலகிற்கு.
இறுதி மூச்சுவரை
கொள்கையை
இறுக்கிப் பிடிப்போம்!
அகவை சதம் கண்ட
மானமிகு சபாபதியாரே!
குடும்பமே ஒன்றாய் கூடினோம்
நூற்றாண்டைக் கொண்டாட!
குறிப்பு: சென்னை பெரம்பூர் சபாபதி – பொறியாளர் இன்பக்கனியின் தந்தையார் ஆவார்!