காட்டாங்குளத்தூர், மே24- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 18.5.2025 அன்று காலை 1030 மணிக்கு காட்டாங்குளத்தூர் ந.மா.முத்துகூத்தன் தெரு,கூத்தர் குடிலில் (மு.கலைவாணன் இல்லம்) நடைபெற்றது.
கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சிவக்குமார் தலைமை ஏற்றார்.
தலைவர் தனது முன்னுரையில் மாவட்ட கழக செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்து பேசினார். இன்னும் வேகமாக இயக்கம் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.செம் பியன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ம நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.தீனதயாளன் வரவேற்று பேசினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் மு.பிச்சைமுத்து தனது கருத்துகளை பதிவு செய்து பேசினார்.
தொடர்ந்து மாநில பகுத்தறிவு கலைத்துறை தலைவர் மு.கலை வாணன் செங்கல்பட்டு மாவட்டத் தில் பகுத்தறிவாளர் கழகம் செயல் பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து மாநில பகுத்தறி வாளர் கழக தலைவர் இர. தமிழ்ச்செல்வன் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் எடுத்துக்கூறி இயக்கத்தின் இன்றைய நிலை மாவட்டத்தில் எப்படி உள்ளது என்பதையும் இன்னும் வேகமாக செயல்பட வேண்டியதன் அவசியத் தையும் எடுத்துக் கூறினார்.
நிகழ்வுகளை மாவட்ட துணைத் தலைவர் சே.சகாயராஜ் ஒருங்கிணைத்தார்
இறுதியில் மறைமலை நகர் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் வி. வசந்தன் நன்றி கூறினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
அனைத்து பொறுப்பாளர் உறுப்பினர் ஒவ்வொரு உறுப்பினரும் விடுதலை,உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக்கள் அதிகளவில் திரட்டுவது,
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரியல் பயிற்சி பட்டறை, பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் அதிக அளவில் நடத்த வேண்டும்.
பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை அறிவியல் மனப்பான்மை பயிற்சிகள் வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பெரியார் ஆயிரம் தேர்வுகளை நடத்த சரியான வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கி அதிக மாணவர்களை பங்கெடுக்க செய்ய வேண்டும்.
வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி மறைமலை நகரில் கழக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனியை அழைத்து செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மறைமலைநகர் பகுதியில் கூட்டம் நடத்த அனைத்து பொறுப்பாளர், தோழர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பகுத்தறிவாளர் கழக
புதிய பொறுப்பாளர்கள்
புதிய பொறுப்பாளர்கள்
அ. சிவக்குமார் – மாவட்ட அமைப்பாளர்
சே. சகாயராஜ் – மாவட்டத் தலைவர்
குழல்.குமரன் – மாவட்டச் செயலாளர்
சி. தீனதயாளன் – மாவட்ட துணைத் தலைவர்
மு. பிச்சை முத்து – மாவட்ட துணைச் செயலாளர்
வி. வசந்தன் – நகர அமைப்பாளர், மறைமலைநகர்
சி.சேகர் – நகர அமைப்பாளர், சிங்கப்பெருமாள் கோயில்
மா.விஜயகுமார் – நகர அமைப்பாளர், கல்பாக்கம்.