தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

2 Min Read

சென்னை, மே 20 தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்ச மடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ்

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் 2020 ஜனவரியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால் 4.47 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 4.41 கோடிக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தொற்றின் தீவிரத்தாலும், இணை நோய் பாதிப்புகளாலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கரோனா தொற்றால் 36 லட்சத்துக்கும் அதிக மானோர் பாதிக்கப்பட்டனர். இதில், 35.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், 38 ஆயிரத்துக்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். தொற்றின் முதலாவது மற்றும் 3-ஆவது அலை யைவிட 2-ஆவது அலையில் தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிக மாக இருந்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படி யாக குறைய தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஜனவரியில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு பூஜ்ஜிய நிலையை எட்டியது. பின்னர், அவ்வப்போது தொற்றால் ஓரிருவர் பாதிக்கப்பட்டனர்.

புதிய வகை வைரஸ் பரவல்

இந்நிலையில், மீண்டும் கரோனா தொற்றின் புதிய வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் 18 பேர் உட்பட நாடுமுழுவதும் சுமார் 100 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய வகை கரோனா வைரஸ் தொற்றால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் இல்லை. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை. கரோனாவும் வழக் கமான காய்ச்சல்போல் தான் உள்ளது. 8 கோடி மக்கள் தொகையில், ஓரிருவர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

அச்சமடைய வேண்டாம்

தமிழ்நாட்டில் மட்டுமே, கரோனா பரிசோதனையை தொடர்ந்து செய்து வருகிறோம். கரோனாவின் தீவிரம் குறைந்து இரண்டு ஆண்டுகளை கடந்தாலும், வீரியத்தை கண்டறிய தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம். மரபணு பரிசோதனையும் அவ்வப்போது செய்யப்படுகிறது. இதுவரை தீவிர பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மற்ற மாநிலங்களில் கெரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் கரோனா பரிசோ தனை செய்யப்படுவதால், இங்கு கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மக்களை அச்சமடைய வேண்டாம். தேவையில்லாதபோது வழக்கமான கரோனா பரிசோதனை செய்வதை கைவிட முடிவு செய்யப் பட்டுள்ளது” என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *