கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

16.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பீகாரில் அம்பேத்கர் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பேச சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்; தடுப்பையும் மீறி, விடுதிக்குள் சென்று உரையாற்றும் காணொலியைப் பகிர்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “நிதிஷ் ஜி மற்றும் மோடி ஜி, உங்களால் முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்கிற புயல் சமூக நீதி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய புரட்சியை கொண்டு வரும்” என்று பதிவிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்ட கருத்துக்கு எதிராக வழக்குப்பதிவில், என்ன பேசினார் என்றே குறிப்பிடப்படவில்லை; மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஜபல்பூர் அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

* குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு சவால் விடுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம். அரசமைப்பைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்திற்கு பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பொதுமக்களின் அழுத்தம் காரணமாகவே மோடி அரசு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவிக்க கட்டாயப்படுத்தியது;  ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வரை தொடர்ந்து போராடுவேன் என்று ராகுல் காந்தி பீகார் மாநிலம் தர்பங்காவில் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘போரை நிறுத்த உதவினேன்’ 6ஆவது முறையாக டிரம்ப் தம்பட்டம்: கத்தாரின் தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானப்படை தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் டிரம்ப் நேற்று (15.5.2025) பேசுகையில், ‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நானே நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் இப்பிரச்சனையை தீர்க்க நான் நிச்சயமாக உதவினேன். போரில் சண்டை போடுவதற்கு பதிலாக வர்த்தகம் செய்வோம் என்றேன். பாகிஸ்தான் அதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது” என பேசினார்.

தி இந்து:

* இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். தலைமை யிலான உச்ச நீதிமன்ற அமர்வு கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர், வக்பு (திருத்த) சட்டம், 2025இன் விதிகளைத் தடுத்து நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்களைக் கேட்க மே 20 ஆம் தேதி முழு நாளையும் ஒதுக்க முடிவு செய்தனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நீட் யு.ஜி. தேர்வு முடிவுகளுக்கு தற்காலிக தடை: மத்திய பிரதேசம் ஒரு தேர்வு மய்யத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை காரணமாக தேர்வு முடிவுகளை அறிவிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது விதித்தது மத்திய பிரதேச உயர் நீதிமன்றம். மே 13 அன்று நீதிமன்றம் இந்த விஷயத்தில் அறிவுறுத்தல்களை எடுக்க உத்தரவிட்ட போதிலும், பிரதிவாதிகள் (தேசிய தேர்வு நிறுவனம் அல்லது இந்திய ஒன்றியம்) சார்பாக எந்த பிரதிநிதிகளும் ஆஜராகவில்லை என்று நீதிபதி சுபோத் அபயங்கர் பெஞ்ச் தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டது.

– குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *