கேரள கல்வித்துறை அமைச்சர் பேட்டி
திருவனந்தபுரம், மே. 15- பள்ளிகளில் கல்வியின் தரத்தை யும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது தொடர் பாக கடந்த 2022-ஆம் ஆண்டு, ‘பிரதான் ஒன்றிய ஸ்கூல் பார் ரைசிங் இந்தியா’ (பிஎம்சிறீ) என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. மேலும் ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடவில்லை. இதனால், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியுதவிகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக கேரள பொது கல்வித்துறை அமைச் சர் சிவன் குட்டி 13.5.2025 அன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
ஒன்றிய அரசின் பிஎம்சிறீ திட் டத்தை கேரளாவில் அமல்படுத் தாததால், பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்க வேண் டிய ரூ.1,500 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அதனை பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சியில் தமிழ் நாட்டுடன் இணைந்து கேரள அரசு ஈடுபடும்.
“தேசிய கல்வி கொள் கையை அமல்படுத்த மாநிலங்கள் எந்த சட்டப் பூர்வ கட்டாயத்திற்கும் உட்பட்டவை அல்ல’ என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இது கேரளா தனது நிதி உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகு வதற்கான வழிகாட்டியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.