ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்த அனைத்து உயிர்களும் இறந்தன. ஆனால், கரப்பான் பூச்சிகள் மட்டும் சாகவில்லை. பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பார்த்ததில், மனிதர்கள் 800 ரேடுகள் அளவிலான அணு ஆயுத கதிர்வீச்சை தாங்கும் சக்தி கொண்டிருக்கும் நிலையில், கரப்பான் பூச்சி 10,000 ரேடுகள் அளவிலான கதிர்வீச்சை தாங்கும் திறன் கொண்டதை கண்டறிந்தனர்.
சு.சாமிகள் எதையும் பேசலாமோ!
அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு 2 நாள்களில் சண்டையை நிறுத்தி பிரதமர் மோடி தவறு செய்துவிட்டதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு எனவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 26 பேரை கொன்ற 4 பேரை பாகிஸ்தான் ஒப்படைக்கும் வரை சண்டையை நிறுத்தியிருக்க கூடாது என ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்தியா – பாக்., அணு ஆயுதப் போரை நிறுத்தினேன்: டிரம்ப்
இந்தியா, பாக்., இடையே ஏற்பட விருந்த அணுஆயுதப் போரை, அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சண்டையை நிறுத்தாவிட்டால், வர்த்தகம் செய்ய மாட்டோம் என இரு நாடுகளையும் எச்சரித்ததாக கூறியுள்ள டிரம்ப், சண்டை நிறுத்தம் ஒன்றே தீர்வு என கூறியதாலேயே இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன என்றார். அணு ஆயுதப்போரால் லட்சக்கணக்கானோர் பலியாவதை தடுத்தது பெருமை என்றும் அவர் கூறினார்.
சட்டம் படிக்க ஆசையா?
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை உள்பட மொத்தம் 13 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளும், 12 தனியார் சட்டக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. மொத்தமாக தமிழ்நாடு கல்லூரிகளில் 3,024 இடங்கள் உள்ளன.