1933ஆம் ஆண்டு, இந்த நாளில் திருச்சியில் சீர்திருத்த திருமணத்திற்கு தந்தை பெரியார் தலைமை தாங்கவிருந்தார். ஆனால், இணையர்களில் ஒருவர் கிறிஸ்தவர். நடக்கவிருப்பது மத மறுப்புத் திருமணம் என்றதும் உள்ளூர் தேவாலயம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
கிறிஸ்தவர்களுக்கான திருமணங்களை நடத்துவது தங்களுடைய கடமை என்றும், தந்தை பெரியார் இதில் தலையிடுவது தங்களுடைய மதக்கோட்பாடுகளுக்கு இடையூறு என்றும் கூறி, அவரைத் திருமணத்திற்கு தலைமை தாங்குவதைத் தடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
இருப்பினும், தந்தை பெரியார் இந்த எதிர்ப்புகளை மீறி, அந்தத் திருமணத்திற்கு தலைமை தாங்கினார். இதனால், அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தன்னுடைய இணையர் ஈ.வெ.ரா.நாகம்மையார் மறைந்த மறுநாளே இயக்கப் பணியில் ஈடுபட்டு தந்தை பெரியார் கைதும் ஆன நாள் இன்று!