சங்கராபுரம், மே12– சங்கைத் தமிழ்ச் சங்க மும், திலகம் அய்.ஏ.எஸ் அகாடமியும் இணைந்து சங்கராபுரம் தனியார் கூட்டரங்கத்தில் 06.05.2025 அன்று மாலை 4:30 மணிக்கு நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவிற்கு மாவட்ட திராவிடர் கழக காப்பாளரும் சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான ம.சுப்பராயன் தலைமை வகித்தார். சங்கைத் தமிழ்ச் சங்க செயலாளர் பாவலர் ச. சாதிக் பாட்ஷா வரவேற்புரை யாற்றினார்.
இவ்விழாவில் திலகம் அய்.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் ரோட்டரி சுதாகரன், போட்டித் தேர்வு மய்யத்தின் தலை மைப் பேராசிரியர் சே. பொன்முடி, மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொருளாளர் ரோட்டரி இராமமுத்துக்கருப்பன், சங்கராபுரம் நகர பகுத் தறிவாளர் கழகத் தலை வர் ஆ.இலட்சுமிபதி, இல.அம்பேத்கர், சங்க ராபுரம் அனைத்து வணி கர் சங்க செயலாளர் கோ. குசேலன், ரோட்டரி மூர்த்தி, கார்குழலி நினைவு அறக்கட்டளை தலைவர் ராசு தாமோதரன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் வ. விஜயகுமார், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ. சவுந்தரராசன் ஆ கியோர் முன்னிலை உரையாற்றினர்.
திலகம் அய்.ஏ.எஸ் அகாடமியின் மாணவர் கோ.சிவகுமார் பாரதி தாசனும் தமிழும் என்ற தலைப்பிலும், துர்கா என்ற மாணவி பாரதிதாசனும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பிலும், அபுதாகீர் என்ற மாணவர் பாரதிதாசனும் தமிழர் முன்னேற்றமும் என்ற தலைப்பிலும் பேசினர்.
புரட்சிக்கவிஞர் பாடல்களை செ. சக்தி வேல்,சண்முகம் பிச்சை பிள்ளை, பாரதிகிருஷ்ணன் ஆகியோர் பாடினார்கள். இந்த விழாவில் சங்கரா புரம் ஒன்றிய கழக செயலாளர் கே.மதியழகன், சங்கராபுரம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா. ஏழுமலை, கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதி வாணன்,நல்லாசிரியர் தெய்வநாயகம், பொறி யாளர் து. செல்வமணி, சங்கராபுரம் தமிழ் படைப் பாளர் சங்கத் தலைவர் மருத்துவர் செழியன், திரு சீனிவாசன் இணை இயக்குனர் (ஓய்வு)ஊரக வளர்ச்சித் துறை, திலகம் அய்.ஏ.எஸ் அகாடமி தமிழ் பயிற்றுநர் ரஞ்சித்,சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் செ. ஆண்டப்பன்; துணைத் தலைவர் நா.கமலநாதன்; துணைச் செயலாளர் கோ.சக்திவேல்,திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாவட்ட செயலாளர் அய்.சுல்பிகார் அலி, அரசம்பட்டு சந்திரசேகர் ஆசாத், ஜெயக்குமாரி, ஊராங்கானி செ.கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்களதி காரம் மாவட்ட செய லாளர் ஆ. ராமலிங்கம் நன்றி கூற விழா இனிதாக முடிந்தது.