தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ குமரி அனந்தன் (வயது 93, மறைவு: 9.4.2025), உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி அ.இராமசாமி (வயது 96, மறைவு: 8.3.2025), மலேசியா பெரியார் பெருந்தொண்டர் எம்.காந்தராஜ் (வயது 76, மறைவு: 23.2.2024), பகுத்தறிவாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான கவிஞர் நந்தலாலா (வயது 70, மறைவு: 4.3.2025), திராவிட இயக்க எழுத்தாளர் விஜயபாஸ்கர் (வயது 40, மறைவு: 12.4.2025), உடு மலைப்பேட்டை டாக்டர் முத்துச்சாமி அவர்களின் வாழ்விணையர் கற்பகவல்லி அம்மையார் (வயது 81, மறைவு: 2.5.2025) ஆகியோரின் மறைவிற்கும்,
கழகத் தோழர்கள் – செயல் வீரர்கள்
கரூர் நகர கழகத் தலைவர் க.நா.சதாசிவம் (வயது 74, மறைவு: 15.2.2025), தஞ்சை கொள்கை வீரர் ‘ஆட்டோ’ ஏகாம்பரம் (வயது 49, மறைவு: 26.2.2025), பேராசிரியர் புள்ளம்பாடி புலவர் ந.வெற்றியழகன் (வயது 90, மறைவு: 28.2.2025), கேதாரிமங்கலம் தி.வீரமணி (மறைவு: 11.3.2025), கீரமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அ.தங்கராசு (வயது 89, மறைவு: 16.3.2025), திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் வ.மாரியப்பன் (வயது 65, மறைவு: 3.2.2025), தருமபுரி நகர கழக இளைஞரணி செயலாளர் மு.அர்ச்சுனன் (வயது – 41, மறைவு: 31.3.2025), கழகப் பொதுக்குழு உறுப்பினர் வேடசந்தூர் தி.குணசேகரன் (வயது 65, மறைவு: 9.4.2025), மாவட்ட கழகக் காப்பாளர் வழக்குரைஞர் என்.எஸ்.பிரபாவதி (வயது – 85, மறைவு: 11.4.2025), திருச்சி – கலைஞர் கருணாநிதி நகர் கழக அமைப்பாளர் தமிழரசன் (மறைவு: 19.4.2025), கரூர்- இராயனூர் பெரியார் பெருந்தொண்டர் கி.பழனிச்சாமி (வயது – 83, மறைவு: 22.4.2025), திருவாரூர் – புலிவலம் கி.அமிர்தகவுரி (வயது – 77, மறைவு: 28.4.2025), தஞ்சை மாவட்ட கழக விவசாய அணி செயலாளர் பூவை ரெ.இராமசாமி (வயது- 69, மறைவு: 3.5.2025), திருவண்ணாமலை – போளூர் ஒன்றிய கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் எம்.எஸ்.பலராமன் (மறைவு: 4.5.2025), ஒசூர் மாவட்ட கழகக் காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி (வயது 74, மறைவு: 5.5.2025), கழகப் பொதுக்குழு உறுப்பினர் கீழப்பாவூர் பொன்ராஜ் (வயது 65, மறைவு: 6.5.2025)
ஆகியோர் மறைவிற்கு கழகத் தலைமைச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வது டன் மறைந்த தோழர்களின் அளப்பரிய இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து வீர வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்கிறது.