1000 ஆண்களுக்கு 700 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரிப்பு

1 Min Read

அரியானா, மே 8- அரியானாவில் பல கிராமங்களில் 1,000 ஆண் களுக்கு 700 பெண்கள் மட்டுமே என்கிற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அங்குள்ள பல கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 481 கிராமங்களில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த அய்ந்தாண்டு களில் அரியானாவில் பிறப்பு விகிதத்தை ஆய்வு செய்தபோது, ஆயிரம் ஆண் குழந்தைகள் பிரசவிக்கிறது எனில் அதை ஒப்பிடும்போது 700க்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

விகிதாச்சார இடைவெளி அதிகரிப்பு

அரியானாவில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் அமைந்துள்ள கிராமங் களில் இதுவே கள யதார்த்தம் என்கிறது ஆய்வு முடிவு.

அரியானாவில் மொத்தமுள்ள 6,842 கிராமங்களில், ஆம்பாலா மாவட்டத்தில் 54, அதனையொட்டியுள்ள யமுனா நகர் மாவட் டத்தில் 53, பஞ்ச்குலா மாவட்டத்தில் 38 கிராமங்கள், அரியானாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள பிவானி மாவட்டத்தில் 46 கிராமங்கள், மஹேந்தர்கர் மாவட்டத்தில் 42 கிராமங்களில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்துள்ளது.

மேற்கண்ட அனைத்து கிராமங்களும் அரியா னாவின் எல்லையோரப் பகுதிகளாக அமைந் திருப்பது கவனிக்கத்தக்கது.

அதன் அண்டை மாநிலங்களான தெற்கே ராஜஸ்தான், வடக்கே பஞ்சாப், இமாசல பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளையொட்டி இந்த கிராமங்கள் அமைந் திருக்கின்றன.

இதனால் இங்குள்ள மக்கள் எளிதில் அந்த மாநிலங்களுக்குச் செல்ல முடிகிறது.

அங்கு செல்லும் அவர்கள், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்பதை முன்கூட்டியே அறிந்து, பெண்ணாக இருப்பின் சட்டத்துக்குப் புறம்பாக கருவைக் கலைத்துவிடும் சம்பவங்களும் சத்தமில் லாமல் அதிகரித்துள்ளது.

இதற்கான தீர்வு, அனைத்து மாநிலங்களின் கூட்டு நடவடிக்கையால் மட்டுமே எட்டப்பட முடியும் என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *