புதுடில்லி, மே.8- உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்து ரைக்கப்பட்டவர்களில் 221 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனராம். 29 பேரின் பெயர்கள் நிலுவையில் உள்ளதும் உச்சநீதிமன்றம் வெளியிட்ட பட்டிய லில் தெரிய வந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் கொலீஜி யத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்கள், நிலுவையில் இருக்கும் நியமனங்கள் உள்ளிட்ட விவரங்கள் முதல் முறையாக வெளி யிடப்பட்டு உள்ளன. வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் நடவடிக்கையாக இவை வெளி யிடப்பட்டது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளுடன் உறவுகள் மற்றும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நியமன முடிவுகள் பற்றிய எண்ணிக்கையும் வெளியாகி உள்ளது.
அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர்
10 ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய 303 பேரை பரிந்துரை செய்ததாகவும், அவர்களில் 170 பேர் ஒன்றிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 17 பேர் பெயர்கள் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.
கொலீஜியம் பரிந்துரைத்த 303 பேரில் 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள், 5 பேர் பழங்குடியினர். 21 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். 28 பெண்கள் மற்றும் 23 சிறு பான்மை சமூகத்தவர்களும் இந்த பட்டியலில் அடக்கம்.
இதேபோல், 2024 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டு மே.5 ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில், மொத்தம் 103 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவற்றில் 51 பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. 12 பெயர்கள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர் களில் 221 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதும், 29 பேரின் பெயர்கள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.