ராபர்ட் கால்டுவெல் தமிழ்ப் பணியாற்றிய முக்கிய அய்ரோப்பியர் மற்றும் தமிழாய்வாளர் ஆவார்.
அவர் 1814-இல் பிறந்தார். கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தை முன்வைத்தவர்; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற தென்னிந்திய மொழிகள் தனித்துவமான ஒரு மொழிக் குடும்பமாக இருப்பதை அவர் நிரூபித்தார். 1856-ஆம் ஆண்டில் அவர் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல் மொழியியல் ஆய்வில் மிக முக்கியமான படைப்பு ஆகும்.
கால்டுவெல் தமிழின் இலக்கியமும் சமூக வரலாறும் ஆராய்ந்தார். திருநெல்வேலி வரலாறு மற்றும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆகியவை அவரது முக்கிய நூல்கள்.
அவரது ஆய்வுகள் தமிழின் தனித்துவத்தையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தின. குறிப்பாக, திராவிட மொழிகள் சமஸ்கிருதம் போன்ற வட இந்திய மொழிகளுக்கு உட்பட்டவை அல்ல என்பது அவருடைய கண்டுபிடிப்பு. இதனால், தமிழர் மற்றும் பிற திராவிட மக்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தை பெருமையுடன் பார்ப்பதற்கான அடித்தளம் உருவானது.
கால்டுவெல் சமூக மாற்றத்திலும் பங்களித்தார். குறிப்பாக, தமிழ் நாட்டில் தென் பகுதியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை பார்ப் பனிய ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க அவர்களுக்கு கல்வி விழிப்புணர்வூட்டினார். இதன் காரண மாக பல கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க தொடங்கினர் . இதன் மூலம் அவர் சமூக நீதி மற்றும் சமத்துவ இயக்கங்களுக்கு தொடக்கக் காரணமாக இருந்தார்.
சுருக்கமாக, ராபர்ட் கால்டுவெல் தமிழின் மொழியியல், இலக்கிய, சமூக வரலாறு ஆகிய துறைகளில் அடிப்படைக் கருத்துக்களை உருவாக்கியவர் மற்றும் திராவிட மொழிகளின் தனித்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்பதில் அவரது பெரும் பங்கை தமிழ்ப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்
ராபர்ட் கால்டுவெல் அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பாகக் கருதப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் சமஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்டது என்பதையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் ஒரு தனித்துவமான குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதையும் அவர் நிறுவியதுதான்.
இதை அவர் தனது புகழ்பெற்ற நூலான “திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கண நூல்” மூலம் நிரூபித்தார். இது தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிகளின் ஆய்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.