மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலிப் பணியிடங்கள்

3 Min Read

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2025 – Admin (R)

பணி: Scientist ‘B’. காலியிடங்கள்: 22. ஊதியம்: மாதம் ரூ.56,100 – 1,77,500. தகுதி : பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் பொறியியல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேதியியல், இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு(ஏஅய்), கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட், முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளக்கப்படும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Law Officer. காலியிடம்: 1. ஊதியம்: மாதம் ரூ.44,900 – 1,42,400. தகுதி: சட்டப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Technical Supervisor. காலியிடங்கள்: 2. ஊதியம்: மாதம் ரூ.44,900 – 1,42,400. தகுதி: பொறியியல் துறையில் இன்ஸ்ட்ருமென்டேஷன், மின்னணுவியல் பிரிவில் இளங்கலைப் பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Scientific Assistant. காலியிடங்கள்: 4. ஊதியம்: மாதம் ரூ.35.400 – 1,12,400. தகுதி: அறிவியல் பாடப்பிரிவு ஏதாவதொன்றில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Supervisor. காலியிடங்கள்: 5. ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400. தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant. காலியிடங்கள்: 4. ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accounts Assistant. காலியிடங்கள்: 2. ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400. தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Translator. காலியிடம்: 1. ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400. தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் ஏதாவ தொரு முதுநிலைப்பட்டப்படிப்பை முடித்து ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Senior Draughtsman. காலியிடம்: 1. ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400. தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Technician. காலியிடம்: 2. ஊதியம்: மாதம் ரூ.25,500 – 81,100. தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Laboratory Assistant. காலியிடங்கள்: 2. ஊதியம்: மாதம் ரூ.25,500 – 81,000. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk. காலியிடங்கள்: 8. ஊதியம்: மாதம் ரூ.25,500 – 81,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator. காலியிடம்: 1 (UR). ஊதியம்: மாதம் ரூ.25,500 – 81,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8,000 எழுத்துக்கள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer. காலியிடங்கள்: 3. ஊதியம்: மாதம் ரூ.25,500 – 81,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி, அதனை ஆங்கிலத்தில் 50 நிமிடத்திலும், இந்தியில் 65 நிமிடத்திலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *