இட ஒதுக்கீட்டின் ‘புனித’ தன்மையை பாதுகாப்பது அவசியம்

viduthalai
2 Min Read

போலி ஜாதிச் சான்றிதழ் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை, மே.4- இடஒதுக்கீட்டு கொள்கையின் ‘புனித’த் தன்மையை பாதுகாக்கும் விதமாக போலி ஜாதி சான்றிதழ் தொடர்பான விசார ணையை குறித்த காலத்துக்குள் விரை வாக முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

வங்கி வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி யின் உதவி பொது மேலாளர் ஜீவன் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் வங்கியில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் ஜாதிச் சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேருகின்றனர். அவர்கள் தரும் ஜாதிச் சான்றிதழ் பல போலியாக உள்ளன. ஊழியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான ஆய்வுக்குழு உறுதி செய்ய ேவண்டும். ஆனால் இந்த குழு குறித்த காலத்துக்குள் விசாரித்து, உறுதி செய்வது இல்லை. அதனால், எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்க முடியவில்லை, எனவே, ஜாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய கால அனவை நிர்ணயித்து உத்தர விட வேண்டும்” என்று கூறியி ருந்தார்.

அதிகாரம் இல்லை

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- மனுதாரரை பொறுத்த வரை, போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீடு இடத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம் ஜாதி சான்றிதழின் உண்மை தன்மையை மாநில அளவிலான குழு உறுதி செய் வது இல்லை. அந்த விசார ணைக்கு போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பது இல்லை. இதனால் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

விசாரணையை முடிக்கும் காலத்தை நிர்ணயிக்க இந்த உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரை தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்தோம்.

‘புனித’த்தன்மை

எனவே, இடஒதுக்கீட்டு கொள்கையின் உயர் தன்மையையும், பொதுநலனையும் பாதுகாக்கும் விதமாக, போலி ஜாதி சான்றிதழ் குறித்தபுகாரை குறித்து நேரத்தில் விரைவாக விசாரித்து முடிக்க மாநில ஆய்வுக்குழுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். மேலும், போதுமான எண்ணிக்கையில் மாநில ஆய்வுக்குழுக்களை செயலா ளர் உருவாக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல அனைத்து விதமான விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு, இறுதியில்தான் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதனால், இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *