5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி கட்டாய தேர்ச்சி முறை கிடையாதாம்!
ஒன்றிய அரசு அறிவிப்பு!
சிபிஎஸ்இ பள்ளிகள் கொடுக்கும் ஆவணங்களில் பெற்றோர்கள் கையொப்பமிடவேண்டாம்: கல்வியமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
சென்னை, மே 2 ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இருந்த கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்துள்ளது. அதன்படி, இனி வரும் காலங்களில் இந்த வகுப்புகளில் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியிருக்கும்.
இந்த மாற்றம் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்குப் (கேந்திரிய வித்யா லயா, நவோதயா வித்யாலயா போன்றவை) பொருந்தும்.
அமலுக்கு வருகிறது
பாஜக ஆளும் மாநில அரசு களில் பெரும்பாலானவை சிபிஎஸ்இ கொள்கையையும் புதிய கல்விகொள்கையையும் பின்பற்று வதால், பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசு 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கொள்கையை
(No-detention policy) தொடர முடிவு செய்துள்ளது. எனவே, தமிழ்நாடு பெற்றோர்கள் இந்தக் கொள்கை குறித்து கலக்கமடையத் தேவையில்லை
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
கல்வியமைச்சரின் அறிக்கை!
இது தொடர்பாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறும்போது, பெற்றோர்கள் சிபிஎஸ்இ –கொடுக்கும் தேர்ச்சி முறையை ஆதரிக்கும் கடிதத்தில் கையொப்பமிடவேண்டாம் என்று முதலமைச்சருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு எடுத்த முடிவாக அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.