டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதி வாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்; காலக்கெடுவை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய அரசின் அறிவிப்பு இது வெறும் தொடக்கம் மட்டுமே. எதிர்க்கட்சி விழிப்புடன் உள்ளது, அதை உன்னிப்பாக கண்காணிக்கும்’ என்கிறார் ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ் குமார் ஜா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும்; இரண்டு-மூன்று மாத கால அவகாசம் என கால நிர்ணயம் செய்திட வேண்டும். என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்.
தி இந்து:
* “காலக்கெடு இல்லாமல் தலைப்புச் செய்திகளை வழங்குவதில் வல்லவர்” என பிரதமர் மோடி மீது காங்கிரஸ் விமர்சனம். இடஒதுக்கீட்டின் மீதான 50 சதவிகித உச்சவரம்பை நீக்குவதற்கு நரேந்திர மோடி அரசாங்கம் ஒரு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை.
* அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை செயல்படுத்த 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீரசைவ-லிங்காயத்துகள் சமூகத்திற்கு தனி மதக் குறியீடு வேண்டும் என கோரிக்கை.
– குடந்தை கருணா