மலேசியா, சா ஆலம் மாநகரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலேசியப் பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பாவேந்தரின் நூல்கள் கவிதைகள் மற்றும் அவரின் சுயமரியாதை இயக்க ஈடுபாடுகள் குறித்து உரைகள் நிகழ்த்தப்பட்டன. தோழர்கள் த. பரமசிவம், சி .மு.விந்தை குமரன், மு மணிமாறன், தமிழ் வேந்தன் திராவிட மணி மற்றும் முனைவர் மு கோவிந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பேரா மாநிலம் மா.லட்சுமணன், சார் சண்முகம் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தைச் சார்ந்த பெரியார் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.