மும்பை, மே 2- 29.04.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 6 மணியளவில் மும்பை திமுக, தாராவியில் கலைஞர் மாளிகையில் வைத்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் உலகத் தமிழ் நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது .
நிகழ்வில் அ.மகேந்திரன் (துணைத் தலைவர் – மும்பை திராவிடர் கழ கம்) வரவேற்புரையாற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் படத்தை ஆ. பாலசுப்ரமணியன்(திராவிடர் இயக்க உணர்வாளர்) திறந்து வைத்து பெ கணேசன் (தலைவர், மும்பை திராவிடர் கழகம்) தொடக்க உரையாற்ற நிகழ்விற்கு அ. இரவிச்சந்திரன் (தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்) தலைமையில் நடைபெற்றது. ம.சேசுராசு அவர்கள் (பொறுப்புக்குழு தலைவர் – மும்பை தி.மு.க), அன்பழகன் பொற்கோ (மும்பை திமுக), ந. வசந்தகுமார் (மாநில இளைஞரணி அமைப்பாளர் – மும்பை மாநில திமுக), பெரியார் பாலா (பொருளாளர் – மும்பை திராவிடர் கழகம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது .
கவியரங்கம்
பாவேந்தர் பாரதிதாசன் என்ற தலைப்பில் பாவலர் நெல்லைப் பைந்தமிழ் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
கவிபாடிய கவிஞர்கள்
இறை.ச. இராசேந்திரன், வ.இரா.தமிழ்நேசன், வளர்மதி கணேசன், கி.வீரமணி.
இந்நிகழ்வில் மும்பை திமுகவின் முதுபெரும் தொண்டர் சண்முகராசன், மனிதநேய சங்கர்டிராவிட், மகிழ்ச்சி மகளிர் பேரவை நிர்வாகிகள் வெண் ணிலா, வனிதா, வளர்மதி, அய்யா அழகுராஜா, குப்பன், லதீப், வீரை.சோ. பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இறுதியில் நெல்லையாகுமார் (பொருளாளர் – மும்பை பகுத்தறிவாளர் கழகம்) நன்றியுரையாற்றினார்.